வவுனியா மேலதிக அரச அதிபரையும் விட்டு வைக்காத கொரோனா..!

வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிsலையில், அவர் இன்று (22) முன்னெடுத்த துரித அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதை அடுத்து அவர் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப் பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்பினைப் பேணியவர்களையும் தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


அத்துடன், மீண்டும் வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைத் தொடர்ந்தும் பின் பற்றுமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.