யாழில் கோர விபத்து-மாணவி உட்பட இருவர் ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில்..!

சுன்னாகம் காவல் துறை பிரிவுக்குட்பட்ட தாவடிப் பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று காலை இடம் பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

யாழ்ப்பாணம் – தாவடி சந்தியில் இலக்கத் தகடு அற்ற பேருந்து மோதியதில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.


கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி பயணித்த மோட்டார் சைக்கில் மீதே பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தந்தையும் மகளுமே இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.