மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவும் கொரோனா டெல்ரா புதிய வைரஸ்..!

தற்பொழுது நாட்டில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புதிய டெல்டா உப வைரஸ் திரிபு பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்த விடயத்தினைத் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.


ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, புதிய டெல்டா திரிபின் உப பரம்பரை பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.