கஞ்சா உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை விரைவில் சட்ட பூர்வமாக்க நடவடிக்கை..!

கஞ்சா உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை விரைவில் சட்ட பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர், சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.

இன்றைய சபை அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்தார். எதிர்வரும் மாதத்திற்குள் கஞ்சா ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குவதற்கான சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.


மருத்துவத் தேவையை அடிப்படையாகக் கொண்டு கஞ்சா ஏற்றுமதியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர், சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி சுட்டிக் காட்டினார்.