மாணவர்களுக்கு ஊடகங்களும் சிறுவர்களும் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு..!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுசரனையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில் ஊடகங்களும் சிறுவர்களும் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகத்திலிருந்து பாதுகாத்தல் தொடர்பான செயலமர்வு முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் 3.12.2021 காலை 9.30மணியளவில் இடம் பெற்றுள்ளது.


சிலாவத்தை தமிழ் வித்தியாலயம் மற்றும் அளம்பில் றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 08,09ம் தரங்களில் கல்வி பயிலும் ஐம்பது மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


குறித்த செயலமர்வில் கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி ஆசிரியர் பா.தீபச்செல்வன் மற்றும் மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் த.சிறீரஞ்சினி ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.