சிறுவர் உரிமைகள் மற்றும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள்..!

சிறுவர்களுக்கு சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு அவசியமான நிபந்தனைகளை சிறுவர் உரிமைகளாகும் அதாவது சமூகத்தில் சிறுவர்களுக்கு உரித்தாக வேண்டிய வரப்பிரசாதங்கள் சிறுவர் உரிமைகளாகும்.

சிறுவர் உரிமை சாசனம்

உலகில் வாழ்கின்ற மக்களில் ⅓ பகுதியினர் சிறுவர்களாக காணப் படுகின்றனர். உலகளாவிய ரீதியில் சிறுவர் உரிமையை பாதுகாக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை தோற்றம் பெற்றது. அதன் அடிப்படையில் சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சாசனம் உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.


சிறுவர் தினம்

1945 ஆம் ஆண்டில் சிறுவர் தினம் சர்வதேச ரீதியாக கொண்டாட வேண்டியதன் அவசியத்தை ஐக்கியநாடுகள் சபையின் மூலம் சர்வதேச ரீதியாக சிறுவர்கள் எனப்படுவோர் 18 வயது குறைந்த சகலரும் உள்ளடங்குவர்.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் பற்றிய சாசனம் பின்வரும் நான்கு பிரிவுகளில் சிறுவர் உரிமைகள் இடம் பெறுகின்றன

01. உயிர் வாழ்வதற்கான உரிமைகள்
02. மேம்பாட்டுக்கான உரிமைகள்
03. பாதுகாப்பு உரிமைகள்
04. பங்குபற்றும் உரிமைகள்


சர்வதேச ரீதியில் சிறுவர்களுக்கான உரிமைகளாக

 • வாழ்வதற்கும் முன்னேறுவதற்குமான உரிமை
 • பிறப்பின் போது பெயர் ஒன்றையும் இன அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளும் உரிமை
 • பெற்றோரைத் தெரிந்து கொள்வதற்கும் அவர்களது பாதுகாப்பைப்
  பெற்றுக் கொள்வதற்குமான உரிமை
 • கருத்தை வெளிப்படுத்தும் உரிமை
 • போதிய கல்வியைப் பெறும் உரிமை
 • பாலியல் வல்லுறவுகள் இருந்து பாதுகாக்கும் உரிமை
 • சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்கான உரிமை
 • சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள்
 • சிறுவர்களை புறக்கணித்தல்
 • சிறுவர் உழைப்பு
 • மோசமான வார்த்தைப் பிரயோகத்தை அவர்களுக்கு எதிராக பாவித்தல்
 • பாலியல் துஷ்பிரயோகம்
 • யுத்தத்தினால் பாதிப்படைதல்
 • விபச்சாரத்திற்கு அமர்த்துதல்
 • சித்திரவதை
 • போதைப் பொருள் கடத்தலுக்கு இவர்களை பாவித்தல்
 • இளவயது திருமணம்

இலங்கையில் சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்படும் விதம்

1989 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிறுவர் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசும் சாசனத்தை 1990 ஆம் ஆண்டு ஜூலை 12 12ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் தனியார் நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளமை.

பாடசாலை, அனாதை இல்லங்கள், சிறுவர் இல்லங்கள், சிறுவர் பாடசாலைகள் என்பன சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

வளர்ந்தோருக்கு காணப்படுகின்ற உரிமைகள், சிறுவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மாணவர்களுக்கு இழைக்கப்படும் தண்டனைக்கு எதிரான சட்டங்கள்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பின் பிரகாரம் அடிப்படை மனித உரிமை மீறல், வழக்கொன்றை பதிதல்.


உளரீதியான, சரீர ரீதியான தண்டனைகள் வழங்குவதை தடை செய்தல்.
1994 ஆம் ஆண்டு 22 இலக்கம் கொண்ட சித்திரவதைகளை தடுப்பதற்கான சட்டம்.

ஒழுக்காற்று விசாரணைகள் சட்டம்.

பிள்ளைகளை கொடுமைக்கு ஆளாக்கும் குற்றம் ஒன்றை எதிர் நோக்குதல்.
கல்வி கற்கும் உரிமை.

சிறுவர் பராயம் ஆனது கள்ளங்கபடமற்ற மகிழ்ச்சியானது கற்றறிந்து கற்றறிந்து கொள்ளும் பருவமாக கொள்ளப்படுகின்றது.

1997 ஆண்டில் 1 இலக்க சட்டத்தின் பிரகாரம் பெற்றோர் 5 வயதிலிருந்து தமது பிள்ளையை ஒரு பாடசாலைக்கு கிராமமாக சென்று கல்வி கற்பதற்கு ஒழுங்குகள் செய்தல் கடமையாகும்.

சிறுவர் உரிமைகள் அடிப்படையில் அதன் 28, 29 அதன்படி எல்லா பிள்ளைகளும் கல்வி கற்பதற்கு உரித்துடையவர்கள்.

இலங்கையின் கல்விக் கொள்கையாக சிறுவர்கள் என்ற 14 வயதிற்குட்பட்ட சகலருக்கும் கட்டாய கல்வி வழங்கப்பட வேண்டும் என்று உள்ளது.


மாணவர்கள் கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

 • பொருளாதார கஷ்டம் காரணமாக தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் இருத்தல்
 • நோயுற்று இருத்தல் ( உடல், உள ரீதியாக )
 • ஒழுக்கக் கட்டுப்பாடு நடவடிக்கை காரணமாக பாடசாலையில் இருந்து வெளியேறல்.
 • சமவயது பிரிவினரிடையே உள்ள செல்வாக்கு காரணமாக கல்வி மீது வெறுப்படைத்தல்.
 • இலங்கையில் கல்வியில் மாணவர்கள் இடைவிலகலுக்கான காரணங்கள்
 • பரீட்சை முறைகளும் கலைத்திட்டமும்
 • மாணவர்களின் வரவின்மை
 • ஒரே வகுப்பில் தங்கியிருத்தல்
 • கல்விக்கான பிரிவு செலவு உயர்வடைத்தல்
 • கற்றவர்கள் இடையே தொழில் இன்மை
 • வளப்பற்றாக்குறையும், வளப்பாவனையும்