முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்; எதிர்ப்புத் தெரிவித்து நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்..!

முல்லைத்தீவு ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் மீது படையினரின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து நேற்றைய தினம் மாலை போராட்டம் ஒன்று நடத்தப்பட்டடது.

ராஜபக்ச ஆட்சியில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் இணைய ஊடக அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று மாலை நீர்கொழும்பு நகரில் இப் போராட்டம் நடத்தப்பட்டது.


நீர்கொழும்பு ஊடக கழகம், நிபுணத்துவ இணைய ஊடகவியலாளர் சங்கம், கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு மற்றும் கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியன இணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.


நீர்கொழும்பு மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, நீர்கொழும்பு இரவுச் சந்தை மைதானம் வரை பேரணியாகச் சென்று இப் போராட்டம் நிறைவுக்கு வந்தது.