மீண்டுமொரு இரு வாரகால முடக்கம்; தீவிரமாக ஆராய்கிறது அரசு..!

பண்டிகைக் காலங்களில் மக்கள் பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்ளலாம் என்பதால், இம்மாத நடுப் பகுதியில் இரு வாரகால முடக்கமொன்றை அமுல்படுத்த அரசு ஆராய்ந்து வருகிறது.

இதன்படி டிசெம்பர் 23 ஆம் திகதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை நாட்டை சுகாதார கட்டுப் பாடுகளுடன் முடக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே ஆபத்தான ஒமிக்ரொன் வைரஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சுகாதார கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு தீர்மானித்துள்ளது.