மீண்டும் போராட்டத்தில் ஈடுபடத் தயாராகும் ஆசிரிய சங்கங்கள்..!

ஆசிரியர் சேவையை வரைவிட்ட சேவையாக்குவதற்கான குறித்த சுற்று நிருபம் 2021.11.20 இற்கு முன்னர் வெளியிடுவதாக அறிவித்திருந்தும், அடுத்த வாரத்தில் வெளியிடுவதாக கல்வி அமைச்சின் செயலாளரூடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் சேவையை வரைவிட்ட சேவையாக்குவது தொடர்பாகவும் ஆசிரியர் சம்பள உயர்வு தொடர்பாகவும் கல்வி நிர்வாக அதிகாரிகளின் அதிருப்தியானது அம்பலமாகியுள்ளது, அதை காரணமாகக் கொண்டு இந்த தாமதத்தை மேற்கொண்டுள்ளது என ஆசிரியர் சங்கங்கள் நம்புகின்றன.


ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளிலிருந்து இன்னும் முழுமையாக விலகவில்லை என்பதோடு தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாகவே கைவிடப் பட்டுள்ளதென்பது யாவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறே மு.ப 7:30 -பி:ப 1:30 வரைமட்டுமே கடமையில் ஈடுபடுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். பி:ப 1:30 இற்கு பின்னர் குறைந்தப்பட்சம் ஆசிரியர் கூட்டத்திற்கு கூட பங்குபற்றக் கூடாது.


அடுத்த வாரத்திற்குள்ளாக ஆசிரியர் சேவையை வரைவிட்ட சேவையாக்காது விட்டால் ஆசிரியர் சங்கங்கள் அறிவித்தப்படி எந்த சந்தர்ப்பத்திலும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனைத்து ஆசிரியர்களும் தயாராக வேண்டும் என்பதை ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.