மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை காத்தான்குடி பொலிஸாரால் கைது..!

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பகுதியில் 13 வயது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு, தப்பிச் செல்ல முயன்றவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவமானது நேற்று (06) மாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி காத்தான்குடி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, இன்று (7) செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக இடமாற்றப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்றிரவு கொழும்பிற்கு தப்பிச் செல்வதற்காக காத்தான்குடி பஸ் தரப்பிடத்தில் மறைந்திருந்த போது காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இவ்வாறு கைதானவர் 36 வயதுடையவர் என்பதுடன் இவரது மனைவி மத்திய கிழக்கு நாடொன்றில் பணியாற்றி வருகின்றமையும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.