10,000 சம்பள அதிகரிப்பு கோரி பாராளுமன்ற சுற்று வட்டத்தில் போராட்டம்..!

இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவை உட்பட சகல துறைகளிலும் உள்ள ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவாக அதிகரிக்கக் கோரி இன்று (08) பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.


தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளில் உள்ள தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற் சங்கங்கள் இணைந்து கொண்டன.


அனைத்து ஊழியர்களுக்கும் 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட நான்கு அடிப்படை காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த போராட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவை உட்பட சகல துறையினருக்கும் சம்பளம் அதிகரிக்கப்படாவிடின் அடுத்த வருடம் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களுடன் ஆரம்பமாகும் எனவும், வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் போராட்டக் காரர்களின் குரலுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் என வசந்த சமரசிங்க தெரிவித்தார்.