தனியார் கல்வி வகுப்புகளுக்கு குறிப்பிட்ட மாணவர்களுக்கே அனுமதி..!

தனியார் கல்வி வகுப்புகளுக்கு குறிப்பிட்ட மாணவர்களுக்கே சுகாதார வழிகாட்டல்களுடன் வகுப்புகள் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு க.பொ.த சா/த பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு மாத்திரம் தனியார் கல்வி வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த தகவலானது அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் கொரோனா தொற்று காரணமாக கீழ் நிலை வகுப்புகளில் உள்ளவர்கள் தனியார் வகுப்புகளில் பங்கேற்க அனுமதிப்பதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.