12 முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் முதல் டோஸ் பைசர் செலுத்த அனுமதி.,!

இரண்டாவது டோஸ் 16 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், முதல் டோஸ் 12 முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, தடுப்பூசியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.


வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் விமான நிறுவனங்கள் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பது கூட்டத்தில் தெரிய வந்தது.

இதன்படி, சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.


இன்று பதிவாகும் பெரும்பாலான கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் என்று அவதானிக்கப்பட்டுள்ளது, பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவிட் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையை குறைக்க தடுப்பூசி செலுத்தி கொள்வது மிகவும் கட்டாயமன ஒரு விடயம் என்றும் இது தொடர்பில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.