கஞ்சா கடத்தலில் காவல்துறை; வவுனியாவில் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது..!

ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கேரளா கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டில் காவல்துறை சார்ஜன்ட் உட்பட இருவர் புளியங்குளம் பகுதியில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புளியங்குளம் ஸ்ரீ முத்துக்குமார நகரப் பகுதியில் சுமார் 7 கிலோ கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.


விசாரணைகளின் போது, ​​அவருக்கு கஞ்சாவை வழங்கியதாகக் கூறப்படும் ஓமந்தை காவல்நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.