20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாம் கட்ட தடுப்பூசி தொடர்பான அறிவிப்பு..!

20 வயதுக்கு மேற்பட்ட சகலரும் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

அதற்கமைய, இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்று 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள தகுதியுடை நபர்கள் எந்தவொரு தடுப்பூசி நிலையத்திற்கும் சென்று மூன்றாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் அறிவித்துள்ளார்.


முதல் இரு கட்டங்களாகவும் அஸ்ட்ரசெனகா, சினோபார்ம், ஸ்புட்னிக் மற்றும் மொடர்னா என எவ்வகை தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களும் மூன்றாம் கட்டமாக பைசர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.