மத்திய வங்கியின் தீர்மானத்துக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் ரிட் மனு தாக்கல்..!

வங்கி கணக்குகளினூடாக நாட்டுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதியை இலங்கை ரூபாவாக மாற்றுவதை கட்டாயமாக்கி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் (BASL) இன்று ( 14) மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இலங்கை சட்டத்தரணிகளின் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் அந்த சங்கத்தின் பிரதி தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் பிரதிவாதிகளாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், மத்திய வங்கியின் நாணய சபை, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ வங்கி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது