அதிபர்-ஆசிரியர் சம்பள முரண்பாடு பிரச்சினை; வெளிவரவுள்ள புதிய சுற்றுநிருபம்..!

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (13) இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே கல்வி அமைச்சர், இதனை அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.


இதன்படி அதிபர் மற்றும் ஆசிரியர்களின் ஆவணங்களை வலய கல்விப் பணிமனைகளிலிருந்து திரட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் மற்றும் ஆசிரியர் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில், எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையினால், அந்த நடவடிக்கைகளை விரைவில் தீர்க்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


அதிபர் மற்றும் ஆசிரியர்களின் ஆவணங்கள் கிடைக்கப் பெற்றவுடன், சம்பள முரண்பாட்டு பிரச்சினையை தீர்க்கும் வகையிலான சுற்று நிருபம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.