நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள மத்திய நிலையத்திலும் 3 ஆவது தடுப்பூசியை பெறும் வசதி..!

20 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள தடுப்பூசி மத்திய நிலையத்திலும் 3 ஆவது தடுப்பூசியான பைசரை பெற்றுக் கொள்ள முடியும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.


வதந்திகளை நம்பாது விரைவாக இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதன் மூலம் பண்டிகைக் காலத்தில் கொரோனா பரவல் அபாயத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.