பொதுப் பரீட்சைத் திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!

இவ் வருடத்திற்கான க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகள் திட்டமிடப்பட்ட திகதிகளில் எவ்வித மாற்றமுமின்றி நடைபெறும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.


அவிசாவளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.


இதன் போது, உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் பல்கலைக் கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் வரையான 10 மாதங்களுக்கும் மேலான காத்திருப்பு இடைவெளியை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.