புதுவருட ஆரம்பமே போராட்ட களமாக மாறப்போகும் – இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

தமது கோரிக்கைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப் படாதுவிட்டால், தாம் மீண்டும் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


சம்பள முரண்பாடு மற்றும் அதிபர் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சுற்றறிக்கை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் 6 மாத காலத்திற்குள் தீர்வு வழங்குவதற்கான குழு அமைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.


யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நேற்று (18) இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வட மாகாண அதிபர்கள் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறினார்.