நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை – ஜோசப் ஸ்டாலின் தெரிவிப்பு

நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் சுமார் 30,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.


குறிப்பாக விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையே நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.