13 தங்கப் பதக்கங்களை பெற்று அம்பாறை தமிழ் மாணவி சாதனை..!

கொழும்பு பல்கலைக் கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் (First class ) தேர்ச்சி பெற்ற அக்கரைப்பற்றை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா 13 தங்கப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளாா்.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின் போதே வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உட்பட 13 தங்கப்பதக்கங்களை இவர் தனதாக்கிக் கொண்டுள்ளாா்.


அத்துடன் குறித்த பட்டப்படிப்பு ஆண்டுக்குரிய முதல் நிலையாளராகவும் (Topper) ஆகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று 7/3 ஜ சேர்ந்த ஓய்வு நிலை அதிபர் தணிகாசலம் மற்றும் குமுதா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியான தர்ஷிகா இச் சாதனையை புரிந்து பெற்றோருக்கும் பாடசாலைக்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.


நாமும் அவரை உளமார வாழ்த்துவோம்…!