சட்ட விரோத சொத்து சேகரிப்பு; அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்..!

சமூகத்தில் வாழும் பல்வேறு நபர்கள் பல்வேறு வழிகளில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு சொத்துக்களை சம்பாதிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சட்ட விரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு மூலம் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


1917 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக புலனாய்வுப் பிரிவிற்கு பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த அவசர இலக்கம் 24 மணி நேரமும் செயலில் இருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.


இதேவேளை தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக பொய்யான தகவல்களை வழங்குபவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப் படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.