பேச்சுவார்த்தை தோல்வி; பகிஷ்கரிப்பு தொடர்கின்றது – ரயில்வே பொறுப்பதிகாரிகள் சங்கம்

பொது முகாமையாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தங்களின் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன குறிப்பிட்டார்.


ரயில் சமிஞ்சை கட்டமைப்புகளை புனரமைக்காமை, சேதமடைந்த ரயில் பெட்டிகளை போக்குவரத்திற்கு பயன்படுத்தி பயணிகளை உயிராபத்துக்கு உட்படுத்துவதை எதிர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 23 ஆம் திகதி தொடக்கம் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


போக்குவரத்திற்கான பற்றுச்சீட்டை விநியோகிக்காமை, பொதிகளை பொறுப்பேற்காமை உள்ளிட்ட செயற்பாடுகளில் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் ஈடுபட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.