பல்கலை மாணவர்களின் வகுப்புக்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

கொரோனா தொற்றை அடுத்து இடைநிறுத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி அனைத்து பல்கலைக் கழகங்களிலும் மாணவர்களை மீண்டும் விரிவுரைக்கு அழைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தீர்மானித்துள்ளது.


50% கொள்ளளவுடன் மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.