பிலிப்பைன்ஸை தாக்கிய ராய் சூறாவளி; உயிரிழப்பு 405 ஆக அதிகரிப்பு..!

பிலிப்பைன்ஸை தாக்கிய ராய் சூறாவளியில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 405 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 82 பேர் காணாமற் போயுள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


சூறாவளியினால் காயமடைந்தோரின் எண்ணிக்கை 1,147 ஆக பதிவாகியுள்ளது. 5,30,000-இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


சூறாவளி அனர்த்தத்தினால் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் விவசாயத் துறைக்கு 459 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளது.