மாணவர்களின் விடுபட்ட பாடங்களையும் பூர்த்தி செய்ய திட்டம் – கல்வி அமைச்சின் செயலாளர்

மாணவர்கள் புதிய வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், கடந்த தரங்களில் விடுபட்ட பாடங்களையும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் கல்வித் துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளாா்.


பாடத் திட்டங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளாா்.