”இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால்தான் என்ன…” கொக்குவிலில் இன்று நூல் அறிமுக நிகழ்வு..!

கலைஞரும், ஊடகவியலாளரும், முற்போக்கு எழுத்தாளருமான வைரமுத்து திவ்வியராஜனின் “இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன…” நூல் அறிமுக நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை (02.01.2022) பிற்பகல்-04 மணி முதல் இல- 62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தியில் உள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.


குறித்த நிகழ்வில் ஈழத்தின் புகழ்பூத்த கலை, இலக்கிய, சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு நூல் அறிமுக உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.


இதேவேளை, சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இடம் பெறும் மேற்படி நிகழ்வில் ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு தேசிய கலை இலக்கியப் பேரவையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

(தேசிய கலை இலக்கியப் பேரவை)