புத்தாக்க அரங்க இயக்கத்தின் இணையவழிப் பன்னாட்டு அரங்க கதையாடல் இன்று ஆரம்பம்..!

புத்தாக்க அரங்க இயக்கம் நடாத்தும் மெய்நிகர் இணையவழிப் பன்னாட்டு அரங்க கதையாடல் தொடர்-11 நிகழ்வு இன்று 02 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை முதல் எதிர்வரும்-6 ஆம் திகதி வியாழக் கிழமை வரை இரவு-07 மணியளவில் புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.


இந்த நிகழ்வில் இன்று ஞாயிற்றுக்கிழமை(02) கொழும்பு இராமநாதன் இந்துமகளிர் கல்லூரி ஆசிரியை கலைஞானச் சுடர்.சுபாஷினி பிரணவன் “வாழ்விலும் நாடகமும்” எனும் தலைப்பிலும், நாளை திங்கட்கிழமை(03) திருமறைக்கலாமன்ற ஓப்பனைக் கலைஞர் “அன்று யூலியஸ் நாடகத்தில் ஓப்பனையின் வகிபங்கு” எனும் தலைப்பிலும், நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை(04) கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் வீ.கருணலிங்கம் “கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பாரம்பரிய நாடகங்களின் ஆற்றுகையும் பேணுகையும்” எனும் தலைப்பிலும், 05 ஆம் திகதி புதன்கிழமை டெல்லி தேசிய நாடகப்பள்ளிப் பேராசிரியர் கே.எஸ்.ராஜேந்திரன் “இந்திய அரங்கும் தமிழ் அரங்கும் சமகாலப் போக்கும்” எனும் தலைப்பிலும், 06 ஆம் திகதி வியாழக்கிழமை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் வீ. கே.ரவிச்சந்திரன் “கிழக்கு இலங்கைச் சூழலில் உள்ள பிரதிகளற்ற நவீன நாடகங்கள்” எனும் தலைப்பிலும் கதையாடவுள்ளனர்.


நிறைவுரையினைப் புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் நிகழ்த்தவுள்ளார்.


இதேவேளை, மேற்படி இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வில் ஆர்வமுடையவர்களை சூம் செயலி இலக்கம் 647334 8261, கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.