அரச ஊழியர்கள் அனைவருக்கும் ஜனவரி முதல் 5000 ரூபாய் விசேட கொடுப்பனவு – பசில் அதிரடி

அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கு ரூபா 5000 இம்மாதம் முதல் சம்பளத்துடன் இணைந்த கொடுப்பனவாக வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டார்.

இந்தக் கொடுப்பனவானது ஓய்வு பெற்ற அனைவருக்கும் கிடைக்கப் பெறும் என்பதுடன் இந்த வருடம் சம்பள முரண்பாடு தீர்க்கப்பட்ட அதிபர், ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் எனவும் ஓய்வூதிய தாரர்களுக்கும் இக் கொடுப்பனவு ஒரு வருடத்திற்கு வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


நாட்டில் நெருக்கடியான நிலையில் அரச ஊழியர்களின் நலன்களை பாதுகாக்க இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டதாகவும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கும் கொடுப்பனவு ஒன்றினை வழங்குவதற்காக குறித்த நிறுவனங்களுடம் பேச்சுவார்த்தை நடாத்த இருப்பதாகவும் குறிப்பிட்டார்.


மேற்படி செலவினங்களுக்காக போதுமான நிதி வரவு செலவுத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் இந்த செலவுகளுக்காக எந்த வரிகளும் விதிக்கப்பட மாட்டாது எனக் குறிப்பிட்ட நிதி அமைச்சர் இது தொடர்பான சுற்றுநிருபம் நிதி அமைச்சினால் விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.