இம்மாதம் 18 ஆம் திகதி முதல் கல்வியற் கல்லூரிகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் மீள ஆரம்பம்..!

கல்வியற் கல்லூரிகளின் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதுடன், எதிர்வரும்18 ஆம் திகதி முதல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அனைத்து தேசிய கல்வியற் கல்லூரிகளின் செயற்பாடுகளையும் உடன் ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆலோசனையை வழங்கினார்.


அதற்கமைய, இன்று கல்வியியல் கல்லூரிகளின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் 18 ஆம்திகதி கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். அதேவேளை கொவிட்-19 சிகிச்சை நிலையங்களாக கல்வியியல் கல்லூரிகள் பயன்படுத்தப்பட்டமையால், அவற்றில் கற்பித்தல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.


தற்போது 7,784 பேர் ஆசிரியர் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன், 4,547 பேர் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்குரிய தகுதியைப் பூர்த்தி செய்துள்ளனர்.

இதேவேளை தகுதி பெற்றவர்களை உடன் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.