தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கு புதிய சுற்று நிரூபம்..!

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக புதிய சுற்று நிரூபத்தினை வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும் போது எழுந்த பிரச்சினைகள் தொடர்பாக அதிபர்கள், சுற்றறிக்கை திருத்தக் குழு, அமைச்சின் விசாரணைப் பிரிவு, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களால் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.


இவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களோடு, அது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புக்களையும் கருத்தில் கொண்டு, திருத்தப்பட்ட புதிய சுற்றறிக்கையொன்று கல்வி அமைச்சால் தயாரிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய 2023 ஆண்டு தொடக்கம் தொடர்ந்து வரும் காலங்களில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக குறித்த திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உட்பிரிவுகளை ஏற்புடையதாக்கிக் கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.