பாடசாலை வருகை தராது விட்டால் தனிப்பட்ட விடுமுறையில் பதியப்படும் என வற்புறுத்த எந்த அதிபருக்கும் அதிகாரமில்லை..

பாடசாலைகளுக்கு வருகை தராவிட்டால் ஆசிரியரின் தனிப்பட்ட விடுமுறையில் பதியப்படும் என்று மிரட்டல் விடுக்க எந்த அதிபருக்கும் கல்வி அமைச்சினால் அதிகாரம் வழங்கப்பட வில்லை என இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.


கல்வி அமைச்சர், இவ்வாரம் ஆசிரியர்கள் தன்னார்வ அடிப்படையில் கடமைக்கு வருகை தருமாறு கோரியுள்ள பின்னணியில் எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலை வர முடியாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறையில் பதியப்படும் என அச்சுறுத்தல் விடுக்க அதிபர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், அவ்வாறு அச்சுறுத்தல் விடுப்பது பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.


இன்று காலை முகநூல் நேரலையில் உரையாற்றும் போது, அவ்வாறு பல பிரதேசங்களில் அதிபர்கள் அச்சுறுத்தல் விடுத்து தேவையற்ற நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.