விவசாய நிலங்களை பாலைவனமாக்கும் வெட்டுக் கிளிகள்..!

0
67

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாதிஷ்சை சுற்றியுள்ள பகுதிகளில் வெட்டுக் கிளிகள் ஏராளமான பயிர்களை தின்று விவசாய நிலங்களை பாலைவனமாக்கிச் சென்றுள்ளன. சோளம், பீன்ஸ் மட்டுமல்லாமல் புற்களை கூட விட்டு வைக்காமல் வெட்டுக் கிளிகள் அழித்துள்ளது.

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த உதவ வேண்டுமென சோமாலிய விவசாயிகள் அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

2019ஆம் ஆண்டின் இறுதி முதல் செங்கடல் பகுதி, சோமாலியா உள்பட கிழக்கு ஆபிரிக்க நாடுகளை வெட்டுக் கிளிகள் சூறையாடி வருகின்றன.

ஏற்கனவே வறுமையும், பசியும், பஞ்சமும் தலைவிரித்தாடும் சோமாலியாவில், விவசாய விளை பொருட்களை வெட்டுக்கிளிகள் அழிப்பது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் இருந்து வர வேண்டிய உரங்கள், வெட்டுக் கிளிகள் தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் வராததால் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது.

இதனால் வெட்டுக் கிளிகள் கட்டுக் கடங்காமல் பயிர்களை தொடர்ச்சியாக சீரழித்து வருகின்றன.