உலக நகராக்கப் பிரச்சினைகள் – புவியியல்

சிறப்புப் பணியும் துரித இயக்கமும் கொண்டவை நகரங்கள் எனப் படுகின்றன. ஒரு நாட்டில் காணப்படுகின்ற குடியிருப்புகளில் ஒப்பீட்டளவில் குறுகிய நிலப் பரப்பில் கூடிய சனத் தொகையையும், பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையையும் கட்டட நிர்மாண வளர்ச்சியையும் கொண்டு காணப்படும் குடியிருப்புகள் நகரம் என அழைக்கப்படுகின்றனது.

நகரப் பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்தல் நகராக்கம் எனப்படுகின்றது. மேலும் கிராமப் பகுதி ஒன்று நகரப்புறப் பகுதியாக மாற்றம் பெறுவதைக் குறிப்பதுடன், கிராமியத் தன்மைகளைக் கொண்ட ஒரு பகுதி நகர்ப்புறப் பகுதியுடன் இணைக்கப்படுவதன் மூலம் அந்தக் கிராமப்பகுதியும் நகரப் பகுதியாக கருதப்படுவதையும் நகராக்கம் என்ற பதம் விளக்குகின்றது. அந்தவகையில் நகராக்கம் என்ற பதமானது பினவரும் விடயங்களை உள்ளடக்கி நிற்கின்றது.

• நகரப்பகுதி ஒன்றில் வசிக்கின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
• கிராமப் பகுதியின் இயல்புகள் விருத்தியடைந்து நகரமாக மாற்றமடைதல்
• கிராமப் பகுதியானது பிரதான நகரம் ஒன்றுடன் இணைக்கப்பட்டு நகரப் புறமாகக் கொள்ளப்படுதல்

பொதுவாக நகராக்கத்தை அளவிடும் போது மொத்தக் குடித்தொகையின் எத்தனை சதவீதத்தினர் நகர்ப் புறப் பகுதிகளில் வாழுகின்றனர் என்று குறிப்பிடப் படுகின்றது. இது நகரமயமாதல் குறிகாட்டி அல்லது நகராக்க அளவு என அழைக்கப்படும்.

நகர சனத்தொகை அடிப்படையில் கண்டங்களை நோக்குகின்ற போது முன்னணியில் வடமெரிக்கா கண்டம் காணப்பபடுகின்றது. வட அமெரிக்காவைத் தொடர்ந்து, இலத்தின் அமெரிக்கா கண்டம், ஐரோப்பா, ஓசியானியா, ஆசியா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்கள் ஒழுங்கு முறையில் அமைகின்றன.

உலகிலுள்ள நாடுகளில் நகர சனத்தொகையினை அதிக சதவீதத்தில் கொண்ட முதல் பத்து நாhடுகளாக கொங்கொங், மாகோ, சிங்கப்பூர், ஜிப்ரால்டர், கொலிசி, மொனாகோ, அங்கியிலா, சைமன்தீவு, பேமுடா, நவுறு முதலியன காணப்படுகின்றன. இந்த நாடுகள் யாவும் 100 சதவீதமான நகரசனத்தொகையை கொண்டமைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

நகராக்கப் பிரச்சினைகள்

நகராக்கம் தொடர்பான பிரச்சினைகள் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பார்க்கிலும், வளர்முக நாடுகளிலேயே மிகவும் அதிகமானதாகக் காணப்படுகின்றது. நகராக்கப்பிரச்சினைகளை பொதுவாக சூழல்சார் பிரச்சினைகள், சமூகபொருளாதாரப் பிரச்சினைகள் என இரண்டாகப் பிரிக்கலாம்.

தங்குமிட வசதிப்பிரச்சினைகள்:

நகரப் பிரதேசங்களில் நிலத்திற்கான பெறுமதி அதிகமாகும்.இதன் காரணமாக வேறு பிரதேசங்களிலிருந்து நகரை நோக்கி வருபவர்கள் உறைவிடங்களை அமைத்துக் கொள்வதில் சிரமப்படுகின்றனர். பெரும்பாலும் இவ்வாறு வெளியிடங்களிலிருந்து நகரப்குதிகளுக்கு வருபவர்களில் பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்களாகக் காணப் படுகின்றமையாலும் நகரங்களின் ஒதுக்கப்புறங்களில் அதாவது வீதிகளின் அருகாமையிலோ அல்லது கால்வாய்களுக்க அருகிலோ தமது உறைவிடங்களை தற்காலிகமாக அமைத்துக் கொள்கின்றனர்.

இத்தகைய தற்காலிக உiவிடங்கள் சேரிக் குடியிருப்புக்கள் எனப்படுகின்றன. இவை சட்ட விரோதமானவையாக விருப்பதுடன், சூழல் பிரச்சினைகளுக்கும் வழி வகுக்கின்றது. சில நாடுகளின் நகரங்களில் வீதிகளிலும் தமது உறைவிடங்களாக பயன்படுத்துகின்றனர்.

உடல்நல சுகாதாரப் பிரச்சினைகள்:

நகரப் பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வாகனங்கள் வெளியேற்றும் புகை, தொழிற் சாலைகளினால் வெளியேற்றப்படும் புகை, நச்சுக் கழிவுகள் காரணமாக உடல்நல சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுகின்றன. தொழிற்சாலைக் கழிவுகள் நீர்நிலைகளில் சேருதல், நகரக் கழிவுகள் குவிந்து கிடத்தல் முதலிவற்றால் தொற்று நோய்கள் பரவுகின்றன.

இவை நுளம்பகளின் பெருக்கத்திற்கு வழிவகுப்பதுடன் டெங்கு, மலேரியா போன்ற நோய்களுக்கும் வழிவகுக்கின்றது. வாகனங்கள், விமானங்கள் மூலம் மேலெழுப்பப்படும் தூசுக்கள் சுவாசத்துடன் கலப்பதனால் சுவாசப் புற்றுநோய் முதலிய நோய்களும் ஏற்படுகின்றன. அத்துடன் நகரப் பகுதிகளில் காணப்படுகின்ற வறியவர்களுக்கு போதிய வருமானமின்மையாலும் சுகாதார வசதிகளை முறையாகப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்கள் உருவாகியுள்ளன.

போக்குவரத்து நெருக்கடி:

நகரப்பிரதேசங்கள் அதிக குடித்தொகையினையும், தொழிற்சாலைகளையும், வர்த்தககட்டங்களையும் அதிகம் கொண்டிருக்கின்றன. இதனால் பெருமளவிலான நகரவாசிகளின் தனிப்பட்ட போக்குவரத்து சாதனங்களான சிற்றூந்து, உந்துருளி, துவிச்சக்கரவண்டி முதலிவற்றின் பாவனை அதிகமாக இருப்பதுடன், அரச மற்றும் தனியார் பேருந்துகளும் அதிகளவில் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.

அத்துடன் நாளாந்தம் உற்பத்திப் பொருட்களையோ வர்த்தகப் பொருட்களையோ ஏற்றியிறக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் நகரப்பிரதேசங்களில் அதிகமாக பாதவனையில் உள்ளன.இத்தகைய காரணங்களால் போக்குவரத்து நெரிசல்களும் விபத்துக்களும் அதிகளவில் ஏற்படுகின்றன. குறிப்பாக சாதாரணமாக ஒரு கிலோமீற்றர் தூரத்தை பேருந்தினால் 4 நிமிடங்களில் கடந்து செல்லக்கூடிய வசதி காணப்படுகின்ற போது இத்தகைய நகரப்பிரதேசங்களில் 20 அல்லது 30 நிமிடங்கள் கூட எடுக்கும்.

சட்ட விரோத நடவடிக்கைகள் அதிகரித்தல்:

நகரப்பிரதேசங்களில் தொழில்வாய்ப்பைத் தேடி பல்வேறு பிரதேசங்களிலுமிருந்தும் இளைஞர்களும், யுவதிகளும் வருகின்றனர். இவர்கள் தமக்குரிய தொழில்வாய்ப்புகள் கிடைக்காத பட்சத்தில் பணம் ஈட்டும்பொருட்டு சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட முனைகின்றனர். கடத்தல், கொள்ளை, திருட்டு, பாதாள உலகக் குழுக்களில் இணைதல், கலாசார சீர்கேடு நடவடிக்கைகள் முதலிவற்றில் இவர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் நகரப்பிரதேசங்களில் குற்றச் செயல்களும், வண்முறை நடவடிக்கைகளும் அதிகளவில் இடம்பெறுகின்றன.

வளி மாசடைதல்:

நகரப் பிரதேசங்களில் வளிமாசடைதல் பல்வேறு வகைகளில் நடைபெறுகின்றது. பிரதேசத்தில் உள்ள வளிமண்டலத்தில் காபனீரொடடசைட்டு வாயு, தூசுக்கள் அதிகளவில் சேர்தல் முக்கியமானதாகும். நகரப்பிரதேசங்களில் காபனீராட்சைட்டு போன்ற வாயுக்களை அதிகளவில் சேர்க்கின்ற மூலங்களாக தொழிற்சாலைகள், அதிகரித்த வாகனப் பாவனை ஆகியன காணப்படுகின்றன. மேலும் நகரப்பகுதிகளில் இடம்பெறுகின்ற தொடர்சிசியான வாகனப் பாவனை, விமானப்போக்குவரத்து காரணமாக நிலத்தில் படிந்துள்ள தூசுதுணிக்கைகள் வளியுடன் கலந்து வளிமாசடைவதில் பங்குவகிக்கின்றன.

நீர் மாசடைதல்:

நகரப் பிரதேசங்களில் தரைமேல் நீர் மாத்திரமன்று, தரைக்கீழ் நீரும் மாசுறுதலுக்கு உள்hகின்றது. அதிகரித்த சனத்தொகை, தொழிற்சாலைகளின் செறிவு ஆகியன காரணமாக ஏற்படும் அதிக திண்ம, திரவக் கழிவுகள் நகரப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் சேருவதனால் நீர் தனது தூயமையினை இழக்கின்றது. அத்துடன் தரைக்கீழ் நீரைப் பொறுத்தவரையில் நகரப்பகுதிகளில் அமைக்கப்படும் சுகாதாரமற்ற மலசலகூடங்கள் கழிவு நீரை நிலத்திற்கு கீழே கசியவிடுவதனாலும் தரைக்கீழ் நீர் மாசடைகின்றது.

நிலம் மாசடைதல்:

நிலம் மாசடைதல் எனும்போது திண்மக்கழிவுகளால் ஏற்படுகின்ற மாசடைதல் முக்கியமானது. மிதமிஞ்சிய சனத்தொகை மற்றும் வியாபார, கைத்தொழில் மையங்களினால் அதிகளிவில் தோற்றம் பெறுகின்ற திண்மக் கழிவுகள் நகரப்பிரதேசங்களில் முக்கியமான ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளன. கழிவுகளை சிறந்த முறையில் முகாமை செய்ய முடியாமை, கழிவுகளின் தொடர்ச்சியான அதிகரிபினால் நகரப் பிரதேசங்களில் திண்மக் கழிவுகளினால் பல்வேறு சூழல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஒலி மாசடைதல்:

வழமையாக மனிதனால் கேட்கக்கூடிய ஒலியின் அளவைவிட அதிகமான அளவு ஒலியினால் பலபாதிப்பகள் மனிதனுக்கு ஏற்படுகின்றன. நகரப்பகுதிகளில் காணப்படும் அதிக குடிச்செறிவு, வியாபார நடவடிக்கைகள, வாகனப்போக்குவரத்து போன்றவற்றினால் நகரப்பிரதேசங்களில் அமைதியான ஒரு சூழலைப் பார்ப்பதென்பது இயலாத காரியமாகின்றது.