‘நான் இறந்தால் எத்தனை பேர் வருவீங்கள்’ நண்பிகளிடம் கேட்டு விட்டு மாணவி தற்கொலை..!

கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் தரம் 11 கல்வி கற்கும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் நேற்று (01) பிற்பகல் இடம் பெற்றுள்ளது.

நேற்று பாடசாலைக்குச் சென்று பரீட்சை எழுதிவிட்டு நண்பிகளுடன் வீடு செல்லும் போது சக மாணவிகளிடம் நான் இறந்தால் நீங்கள் எத்தனை பேர் வருவீங்கள் என கேட்டுச் சென்றவர், வீட்டில் தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.சுமார் 20 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடியவர் பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரமந்தனாறு 71 ஆம் வாய்க்கலைச் சேர்ந்த பத்மநாதன் அகவிழி (16) என்ற க.பொ.த சாதாரண தர மாணவியே தற்கொலை செய்துள்ளார். மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.