பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்த நாயக்கவினால் எழுதப்பட்ட ”சொல்லப்படாத கதை” நூல் பிரதமரிடம் கையளிப்பு..!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்த நாயக்கவால் எழுதப்பட்ட ‘சொல்லப்படாத கதை’ நூல் நேற்று (02) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் வைத்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க  அந் நூலை பிரதமரிடம் கையளித்தார்.நல்லாட்சி அரசாங்கத்தின் போது சிறையிலிருந்த 55 தினங்களில் எழுதப்பட்ட திஸ்ஸ அத்தநாயக்க அவர்களின் ‘சொல்லப்படாத கதை’ நூலின் ஒரு அத்தியாயத்தில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறித்தும் எழுதப்பட்டுள்ளது.

சிறையில் இருந்த காலப் பகுதியில் மூன்று முறைகள் திஸ்ஸ அத்தநாயக்கவை காண்பதற்காக சிறைச் சாலைக்கு சென்ற கடந்த காலத்தை நினைவு கூர்ந்த பிரதமர், தனக்கு நூல் கையளிக்கப்பட்டமை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், நட்பு ரீதியிலான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.