இலங்கையின் சுற்றுலாக் கைத்தொழிலின் போக்கு..!

சுற்றுலாத் துறை உலகின் குறைந்தளவு செலவில் அதிக லாபம் தரும் துறையாக உலகம் பூராவும் உணரப்பட்டுள்ளது. சுற்றுலா கைத்தொழில் நடைமுறையில் உலகின் பாரிய அபிவிருத்தியடைந்து வரும் நிலை காணப்படும் கைத்தொழிலாகும்.

இலங்கை நாட்டைப் பொறுத்த வரையில் வரலாற்று முக்கியத்தவமுடைய இடங்கள், இயற்கை அழகு சார்ந்த இடங்கள், சரணாலயங்கள் என பல்வகை அம்சங்களைக் கொண்டு காணப்படுகின்ற ஒரு பிரதேசமாகும்.

இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள மிக சிறிய தீவாகிய இலங்கையில் பல்வேறு புவியியல் வேறுபாடுகள், பல்வேறு காலநிலை, குறுக்கிய காலத்தினுள் அடையக் கூடிய பல்வேறு இயற்கையானதும், மானிட அமைப்புக்களும் அமைக்கப்பட்டுள்ளதும் சுற்றுலாத் துறையை கவருவதற்கு ஏதுவாகின.

இலங்கைக்கு உல்லாச பிரயாணிகள் தனியாக வருதல் மற்றும் குழுவாக வருதல் என இரண்டு வகைகயில் வருகை தருகின்றனர். குழுவாக சுற்றுலா முகவர்களின் ஊடாக திட்டமிடப்பட்ட சுற்றுலாப் பொதிகளை (Tour Package) விலைக்கு பெற்று வருகைத்தரல்.

1) இலங்கையின் பிரதான சுற்றுலா வலயங்கள்
• கொழும்பு – நகரம்
• கொழும்பு மாநகரம்
• தெற்கு கரை
• கிழக்கு கரை
• மத்திய மலைநாடு
• வரலாற்று நகரம்
• வட பிரதேசம்

2) இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு சாதகமான காரணிகள்

• தரைத்தோற்ற வேறுபாடுகள் – இலங்கையானது மத்திய மலைநாடு, அண்சமவெளி, கரையோரச்சமவெளி என பிரதானமாக மூன்று வேறுபட்ட தரைத்தோற்ற வலயங்களைக் கொண்டு காணப்படுகின்றது. இவ்மூன்று வேறுபட்ட பிரதேசங்களும் பல்வேறு துணை அம்சங்களை தமக்கே உரியனவாகக் கொண்டு காணப்படுகின்றன. இந்த நிலைமையினை பார்வையிடுவதற்காக சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். மலை நாட்டுப் பகுதிகளில் மலைத்தொடர்கள் மற்றும் நீhவீழ்ச்சிகள் பெரிதும் பயணிகளைக் கவர்கின்றன.

• வேறுபட்ட காலநிலை – இலங்கையானது ஈரக் காலநிலை, வரண்ட காலநிலை என இரண்டு பிரதான வேறுபட்ட காலநிலைத் தன்மைகளை கொண்டு காணப்படுகின்றமையும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு காரணமாகியது. ஈரக்காலநிலைப் பகுதியில் தொடர்ச்சியான மழைவீச்சி காணப்படுவதுடன், வரண்ட காலநிலைப் பிரதேசங்களில் பருவத்தில் மாத்திரம் குறநை;த மழைவீச்சி காணப்படுகின்றது. அத்துடன் மலைநாட்டுப் பகுதியில் கடுமையான குளிரும், கரையோரப் பிரதேசத்தில் அதிக வெப்பமும் நிலவுகின்றது.

• இலங்கை தீவாக உள்ளமை – இலங்கை தீவாக உள்ளமையால் சுற்றிவர கடல் காணப்படுகின்றது. கடற்கரையைப் பொறுத்தவரையில் மணல், சூரிய வெளிச்சம் போன்ற அம்சங்கள் பெரிதும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன. இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் கடற்கரை சார்ந்த பிரதேசங்களையே அதிகம் விரும்புகின்றனர்.

• இயற்கை அழகு – இலங்கையில் பல்வேறு இடங்களில் காணப்படும் நீர்வீழ்ச்சி, குன்றுகள், தாவரங்கள் போன்றவற்றால் ஏற்படுத்தப்பட்ட இயற்கை அழகினை ரசிப்பதற்கும் பெருமளவிலான மக்கள் இலங்கைக்கு வருகை தருகின்றனர்.

• தலாவருமானம் வெளிநாடுகளில் உயர்வு -அபிவிருத்தியடைந்த நாடுகளில் மக்களின் பொழுது போக்கிற்கு ஏதுவாய் அமைந்தகாரணி தலா தேசிய வருமானம் உயர் மட்டத்தில் நிலவுவதாகும். வருடாந்த ஓய்வு விடுமுறையை பெற்றுக் கொள்ள அமைத்து ஊழியர்களும் வழக்கமாக்கி கொண்டுள்ளனர். பாடுதல், ரசித்தல், விடுமுறை காலங்களில் தமது வேலையிடத்தில் வெளியேறி விடுமுறையை கழிப்பதற்கு சம்பளத்துடன் விடுமுறை கிடைப்பது காரணமாகும்.

• செலவு குறைவு – வரையறுக்கப்பட்ட பிரதேசத்தில் பல்வேறு நிலைமை காணப் படுகின்றமையும் இவ் ஒவ்வொரு நிலைமையையும் பிரதேசத்தினுள் குறைந்த தூரத்தில் அடையக் கூடியதாக இருப்பதனால் குறைந்த செலவில் விடுமுறையைக் கழிக்க முடியும். அத்துடன் தமது நாட்டில் செலவு செய்வதைவிட குறைந்த செலவில் இலங்கையில் விடுமுறையைக் கழிக்கக் கூடியளவிற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

• அரச ஆதரவு – சுற்றுலா கைத்தொழில் அபிவிருத்திக்காக ஆரம்பத்தில் 1937 சுற்றுலா வேலைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டமை எதிர்க்காலத்திற்குக் காலாகியது. 1966 இல் 10 சுற்றலா சட்டத்தின் ஊடாக இலங்கை சுற்றுலா சபை அமைக்கப்பட்டமை. 1968 – 1978 ற்கு இடையிலான 10 ஆண்டு கால முன்னேற்ற அறிக்கை திட்டத்தை வடிவமைத்தது. இதற்கேற்ப பிரதான சுற்றுலா மத்திய நிலையம் ஐந்தினை பெயரிடல். இலங்கைசுற்றுலா ஹோட்டல் பாடசாலையை அமைத்தல் – 1993 போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கூடாக இலங்கையின் சுற்றுலாத்துறை வளாச்சிக்கு அரசு ஆதரவு வழங்கி வருகின்றது.

• விளம்பரங்கள்:

இலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் தனியார் நிஜறுவனங்களும் தமது சேவைகளை விரிவுபடுத்துவதற்காக பல்வேறு வகையான விளம்பர உத்திகளையும் கையாளவதுடன், இலகுவாக சேவைகளைப் பெறக்கூடிய வழிவகைகளையும் செய்துள்ளன.

3) சுற்றுலாத் தொழிலின் தாக்கம்

• உல்லாசப் பிரயாணத் தொழிலின் மூலம் அனுகூலமான பல நிலைமைகளும் உருவாகின்ற அதேவேளை பாதகமான நிலைமைகளும் உருவாகின்றன. பொதுவாக சுற்றுலாத் தொழிலால் ஏற்படுகின்ற தாக்கங்களை சூழல் தாக்கம் , பொருளாதாரத் தாக்கம், சமூக கலாசாரத் தாக்கம் என மூன்றாகப் பிரிக்கலாம்.

சூழல் தாக்கம்

• இயற்கை அழகு பாதிக்கப்படுதல்:

இலங்கையில் காணப்படுகின்ற இயற்கை சூழலுடனான பிரதேசத்தில் வாடி வீடு, ஹோட்டல் போன்ற கட்டிடங்களை அமைத்தல் இயற்கை அழகிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும். இயற்கையாகவே காணப்படுகின்ற காடுகள் அழிக்கப்படுதல், நீரோடைகளுக்கு சுவர்களை அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் காரணமாக அப்பிரதேசங்களின் இயற்கை அழகு பாதிக்கப்படுதல். கடல் பகுதிகளில் உள்ள அழகிய முருகைக் கற்பாறைகள் அழிவுக்குள்ளாகுதல்.

• கரையோரம் பாதிக்கப்படுதல்:

கடல் அரிப்பு மற்றும் கரையோர மாசடைதல் காரணமாக கடற்கரையோரம் தமது இயல்பு நிலையினை இழந்து பாதிக்கப்படுகின்றது. கரையோரங்களில் உள்ள சுற்றுலா விடுதிகளில் இருந்த வெளியெறும் கழிவுகள், சுற்றுலாப் பயணிகளால் கரையோரத்தில் வீசப்படும் பொருடகள் மற்றும் மதுபாவணை போன்றவற்றினால் கரையோரப் பகுதியின் மாசடைதலுக்க வழிவகுப்பதுடன், கரையோரத்தில் உள்ள கண்டல் தாவரங்கள் மற்றும் காடுகள் அழிக்கப்பட்டு சுற்றுலா விடுதிகள் அமைக்கப்படுவதனால் இலகுவில் கரையோர அரிப்பு ஏற்படுவதற்கும் வழிசமைக்கின்றது.

• நீர்மாசடைதல்:

சுற்றுலா விடுதிகளிலிருந்த வெளியேறும் கழிவு நிர் நீர் நிலைகளில் கலத்தல், நீர்வீழ்ச்சி போன்ற பிரதேசங்களில் சுற்றுலாப் பயணிகள் கழிவுகளை வீசுதல் போன்றவற்றின் காரணமாக நன்னீர் மாசடைதல் போன்றனவும் இடம் பெறுகின்றன.

• உயிர்பல்வகைமை பாதிக்கப்படுதல்:

அழிந்து போகும் அபாயத்தினை எதிர்நோக்கும் உயிர்களின் பகுதிகளில் செய்யப்படும் பொருட்களை உல்லாசப்பயணிகள் விலைக்கு வாங்குதல் அவ்வுயிரினங்களின் அழிவுக்கு ஏதுவாகின்றது. குறிப்பாக கடல் ஆமை, யானை போன்றவற்றின் பகுதிகள் இவ்வாறு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன.

காடுகள் மற்றும் சரணாலயப் பகுதிகளில் அடிக்கடி உல்லாசப் பிரயாணிகளும் அவர்களது வாகனங்களும் வருகைத் தருவதனால் உயிர் பல்வகைமையும், சூழல் தொகுதியினதும், செயற்பாட்டிற்கும் பாதகம் விளைவிக்கின்றது. நக்கில்ஸ், சிங்கராஜா காடு மரங்களின் பகுதிகளை வெட்டி பிரித்து ரகசியமாக வேறு நாடுகளுக்கு உல்லாசப் பயணிகள் எடுத்துச் செல்லல் முதலியனவும் உயிர் பல்வகைமை இழப்பிற்கு வழிசமைக்கின்றது.

பொருளாதாரத் தாக்கம்

• அந்நியச் செலவாணி கிடைத்தல்:

இலங்கையின் பொருளாதாரத்தினுள் அந்நிய செலாவணி உழைப்பதில் பிரதான துறையாக சுற்றுலாத் துறை உள்ளது. 2004ம் ஆண்டிலும் ரூபா மில்லியன் 42.666 (4.7%) , 2005ஆம் ஆண்டில் ரூபா மில்லியன் 36.377 (3.6%) பெற்றுள்ளது. 2006ஆம் ஆண்டு வரை பெற்றுக் கொண்ட வருமானம் அமெரிக்க டொலர் மில்லியன் 319.5 ஆகும்.

2006ம் ஆண்டு உல்லாசப் பிரயாணத் துறை செலவு அமெரிக்க டொலர் 76.7 ஆகும். இதன் அடிப்படையில் இலங்கைக்கு அந்நிய செலாவணியினை இலகுவாக பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பாக உள்ள துறையாக முக்கியத்துவம் பெறுகின்றது.

• தொழில் வாய்ப்பு ஏற்படல்:

உலகில் பெற்றுக் கொள்ளும் அனைத்து தொழில் வாய்ப்புக்களுள் பத்தில் ஒரு பகுதி உல்லாசப் பயணத் துறையை சார்ந்ததாக கவனத்தில் கொள்வதுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது.

நேரடி தொழில் வாய்ப்புகளாக உல்லாச ஹோட்டல், உல்லாச வாடி வீடு, உல்லாச உணவு விடுதியகம் பல்வேறு உல்லாச சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் உருவாகும். மறைமுக வேலை வாய்ப்புக்களாக, ஹோட்டல்களுக்கு உபகார சேவை வழங்குநர். ஞாபகார்த்த பொருட்கள், மாணிக்கக்கல் ஆபரணங்களையும், தங்க ஆபரணங்களையும் உருவாக்குபவர்களும், உல்லாசப் பிரயாண வழிக்காட்டிகள் உருவாகின்றனர்.

• பிரதேச அபிவிருத்தி:

உல்லாசப் பயண பாதுகாப்பு பிரதேசத்திற்கும் அதனை அண்மித்த பிரதேசத்திற்கும் அடிப்படை வசதிகளை விருத்தி செய்தல். உதாரணமாக பாசிக்குடா, பின்னவலை, தம்புள்ளை, கந்தளாய்;, சீகிரியா, பொலன்னறுவை, கதிர்காமம், ஹிக்கடுவ ஆகிய பிரதேசங்களும் அவற்றை சூழவுள்ள பிரதேசங்களிலும் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அப் பிரதேசத்தை அன்மித்து அடிப்படை வசதிகள் அதிகரித்தல், நவீன முறையிலான உல்லாச விடுதிகள் அமைத்தல் போன்றவற்றால் பிரதேச அபிவிருத்தி ஏற்படுகின்றது. உல்லாசப் பிரயாண சேவைக்காக விதி அபிவிருத்திகளும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

• அரச வருமானம் அதிகரித்தல்:

இலங்கை அரசினூடாக, உல்லாசப் பயணத்துறையின் ஊடாக நேரடியாகவும், மறைமுகமாகவும் வரி அறவிடல். அரும்பொருட்சாலை சரணாலயம், தேசிய வனம் (சிங்கராஜா வனம்), கலாசார முக்கோண பிரதேசம் வேறு இடங்களில் நுழைவு கட்டண சீட்டினை விற்பனை செய்வதன் மூலம் அதிகளவு வருமானத்தைப் பெறல். 2005ம் ஆண்டில் இவ்வாறு பெறப்பட்ட வருமானம் ரூபா மில்லியன் 1880.3 பெறப்பட்டது. விமான போக்குவரத்து கட்டணம் தீர்வை கட்டணம் அறவிடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

சமூக கலாசாரத் தாக்கம்

• மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடைதல்:

உல்லாசப் பயண பிரதேசத்தில் உல்லாசப் பயணிகளின் வருகை அப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு வாய்ப்பாகும். உதாரணமாக கண்டி, ஹிக்கடுவ, பெந்தோட்டை, பேருவளை, உணவட்டுன, பின்னவலை, பாசிக்குடா, தம்புள்ளை ஆகிய பிரதேசங்களை குறிப்பிடலாம். குறிப்பிட்ட பிரதேசங்களில் உள்ள மக்கள் பல்வேறு தொழில் வாய்ப்பை பெறுவதற்கு வழிவமைப்பதனால் அவர்களுடைய வருமானம் அதிகரிக்கின்றது.

• இலங்கை கலாசாரம் உலகம் பூராவும் பிரபலமடைதல்.
• இலங்கை கலை நுட்பம், வடிவமைப்பு பிரபலமடைதல்.
• கலாசார முக்கோணத்திற்கு சொந்தமான இடங்களை அநேகமாக தொல் பொருள் காட்சிப்படுத்தலுக்கு அனுமதியும், பணமும் கிடைக்கின்றமை.

• கலாசார பெறுமதி வாய்ந்த விழாக்கள், கலைநுட்பம் சில பொருட்களில் காணப்பட்ட பிரதான கலாசார பண்புகளை பாராட்டுதல்.
• அநேக இனத்தை அறிந்து உலக சமாதானத்திற்கு வழிப்படுத்தல்.
• இலங்கையின் யுவதி, இளைஞர்களை அந்நிய மொழிகளைக் கற்பதற்கு வழி செய்தல்.
• வெளிநாட்டவார்களின் சிறந்த நற்பண்புகளை கற்றுக்கொள்ள விளைதல்.
• சமய, பௌதிக பெறுமதி வாய்ந்த பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிச் செய்தல்.
• உல்லாசப்பயணிகளினால் நாட்டு மக்களுக்கு சுதந்திரமாக தமது சமயத்தை கைக்கொள்வதற்கு இடையூறாக அமைகின்றமை.
• சில வெளிநாட்டு பயணிகள் உள்நாட்டு சமய வழிப்பாட்டு தலங்களில் முறையாக நடந்து கொள்ளாமை
• வெளிநாட்டுப் பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தல்.
• சமூக நோய்கள் பரவல்.
• குழந்தை விற்பனை அதிகரித்தல்.
• மதுபான பாவனை அதிகரித்தல்.

4) சுற்றுலாத் தொழிலின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள்

• இலங்கையின் பௌதிக, மானிட சூழல் சுற்றுலா பயணிகள் கவர்ச்சிக்கு இலகுவாக உள்ளாக்கலாம்.

• சிறிய நாடாகிய எமது நாட்டில் காணப்படும் பௌதீக, சூழல் பல்வகைமையை உல்லாசப் பயணிகளுக்கு கொண்டு செல்லல் இலகுவானது.

• குறுகிய காலத்தில் குறைந்த செலவில் அதிக காலம் ஓய்வாக கழிப்பதற்கு பொருத்தமான சூழல் உண்டு என்பதை உலகலாவிய ரீதியில் பிரச்சாரம் செய்தல் அவசியம்.

• ஏனைய உல்லாசப்பிரயாண பிரதேசங்களுக்கு இணையாக இங்கு காணப்படும் விசேட தன்மை குறித்து வெளிநாட்டு பயணிகளுக்கு பரந்தளவில் அறியச்செய்தல். உலகில் 8வது அதிசயமாக முன்வைக்கக்கூடிய சீகிரியாவை பற்றி கூறல்.

• காட்டு சூழலுக்கு ஏற்ப யானைகளின் மத்திய நிலையமாக விளங்கும் யானைகளின் சரணாலயம் பின்னவல உயிர் பல்வகைமையை பேணி வரும் சிங்கராஜா வனம், நக்கில்ஸ் பாதுகாப்பு வனாத்த வில்லு, சுண்ணாம்பு கல் குகை, ரிதிகலை குன்று உல்லாச பிரயாணிகளை கவரும் இடம் உலகின் வேறு எப்பகுதியிலும் சுற்றுலாபிரதேசங்களை காணமுடிவதில்லை.

• யுனெஸ்கோ நிறுவனத்தினால் பெயரிடப்பட்ட உலக உரிமை 7 ஆகும். அவை இலங்கையில் காணப்படுகின்றது. இதற்கேற்ப இலங்கை விசேடமான உல்லாச பயண வலயமாக பிரசாரம் செய்தல் அவசியமாகும்.

• உல்லாசப்பயணிகளுக்கு இலகுவாக இருப்பதற்காக தங்குமிட வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தல் முக்கியத்துவம் பெறுகின்றது. அதனை விட சுற்றாடலுடன் இணைந்த உல்லாசப் பயணிகளுக்காக அவர்கள் கேட்டுக் கொள்கின்ற தங்குமிட வசதியினை செய்து கொடுத்தல் முக்கியத்துவம் ஆகும்.

• விசேடமாக சுற்றாடலுடன் இணைந்த உல்லாசப்பயணிகள் அடிப்படை வசதிகள், கடற் கரையோரத்தினை பார்வையிடுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல். பறவைகள், நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றை பார்வையிடல் சுற்றாடலை பாதிக்காத வகையில் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் பிரதான அம்சமாகும்.

• உல்லாசப் பயணிகளின் தங்குமிடவசதிகளுக்கு புறம்பாக அவர்களது பயணிகளின் போக்கு வரத்தின் போது சந்தோசமாக ஓய்வினை கழிப்பதற்கு அவசியமான ஏனைய விளையாட்டு வினோத நடவடிக்கைகளும் போன்ற வசதிகளை ஏற்படுத்தல்.

• உல்லாசப்பயணிகளுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகள், விமானம், பெருந்தெரு, புகையிரதம் வேறு போக்குவரத்து ஊடகங்கள் பயன்படுத்தும் போது வசதிகளை மேலும் அதிகரித்தல்.

• உல்லாசப்பயணிகளின் சேவைகளுக்காக அவசியமான ஊழியர்களுக்கு முறையான பயிற்சியை அளித்தல் அவசியமாகும். தற்காலத்தில் உல்லாசப் பயணிகளை வழிநடத்துபவர்கள் தவறான முறையில் செயற்பாடுகளை மேற்கொண்டமையால் உல்லாசப் பயணிகள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.

• தற்காலத்தில் உல்லாசப்பயணத்துறை தொடர்பாக ஏற்பட்டுள்ள கொள்கைகள் நன்மை தரக் கூடியதாக காணப்படாமையினால் சரியான அறிவூட்டல் வழங்கப்படல். அதனூடாக உல்லாசப் பயணத்துறை தொடர்பான பிரச்சினைகளை குறைக்க முடியும்.

• எங்களுடைய நாட்டிற்கு அந்நிய செலாவணியினை இலகுவாக பெற்றுக் கொள்ளக் கூடிய வளமான உல்லாசப் பயணத் துறையினை விருத்தி செய்து தேசிய மட்டத்தில் ஆதரவினை பெறுவதற்கான வேலைத் திட்டங்களை ஒழுங்கமைத்தல்.

• விடுதிகளை அமைக்கும் போது சுற்றாடலுடன் இணைந்தவாறு எல்லைப்படுத்தல். அதிக வருமானம் உல்லாசப் பயணிகளின் மூலம் பெறுவதில் அதிக அவதானிப்பை ஏற்படுத்தல்.