இலங்கையில் இன்று இரு தடவைகள் நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்..!

0
116

இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள கண்டி – திகன பிரதேசத்தில இரண்டு தடவை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் அகழ்வாராய்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசத்தில் இந்த வருடத்தில் ஏற்பட்ட 5ஆவது நிலநடுக்கம் இது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மத்தியில் மீண்டும் அச்ச உணர்வு அதிகரித்துள்ளது.

இதற்கமைய முதலாவது நிலநடுக்கம் இன்று அதிகாலை 5.30 அளவிலும்; இரண்டாவது நிலநடுக்கம் காலை 7.30 அளவிலும் பதிவாகியுள்ளது.

கண்டி – திகன, அம்பாக்கோட்டை, கெங்கல்ல, அளுத்வத்த உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பிரதேச மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி இரவு 9.30 அளவில் முதலாவது நிலநடுக்கம் கண்டி – திகன பிரதேசத்தில் பதிவாகியிருந்தது. 2.5 வரையான ரிச்டர் அளவுகோலில் இது பதிவாகியிருந்ததாக அப்போது அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து செப்டம்பர் மாதம் 10ஆம் திகதியும் இதேபோன்ற சிறியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here