புலமைப் பரிசில் பரீட்சை சித்தி; புதிய பாடசாலைகளில் தரம் 6 அனுமதிக்கான விண்ணங்கள் கோரல்..!

கடந்த புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிகளை விடவும் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை புதிய பாடசாலைகளில் அனுமதிப்பது பற்றிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களையும், ஆலோசனைக் குறிப்புக்களையும் அதிபர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். இவற்றை பூரணப்படுத்தி மீண்டும் அதிபர்களிடம் கையளிக்குமாறு பெற்றோரிடம் கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார விதிமுறைகளுக்கு அமைய விண்ணப்பங்களைக் கையாளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும், அதிபர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் பத்தாம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.