முன்பள்ளி துறையை ஒழுங்குறுத்துவதற்கு தேசிய கொள்கை; இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த..!

முன்பள்ளி துறையை ஒழுங்குறுத்துவதற்காக தேசிய கொள்கையை வகுப்பதற்கு நிபுணத்துவ குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் அறிக்கை எதிர்வரும் 11 ஆம் திகதி கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் பீ.வை.ஜீ. ரத்னசேக்கர சபையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.