முகில் எவ்வாறு உருவாகிறது என உங்களுக்குத் தெரியுமா..?

முகில் எவ்வாறு உருவாகிறது ? 🤔🤔🤔🤔

சூரியனின் வெப்பம் காரணமாக , நிலத்தில் கடல் , குளம் , ஆறு, குட்டை, கிணறு ஆகியவற்றில் இருக்கும் நீர் ஆவியாகி மேலெழுகின்றது இது ஆவியாக்கம் எனப்படுகின்றது அத்துடன் சூரிய வெப்பம் காரணமாக மரங்கள் , செடிகள் , கொடிகளில் இருந்து நீர் ஆவியாகி மேலெழுகின்றது. இது ஆவியுயிர்ப்பு எனப்படுகின்றன.

அவ்வாறு ஆவியாக்க, ஆவியுயிர்ப்பினால் மேலெழும்பும் நீராவியானது , மேலே சென்று குளிர்ந்து ஒடுங்குகின்றது. இது பதங்கமாதல் எனப்படும். அவ்வாறு தண்ணீர் துளிகளாகவும் , பனித் துளிகளாகவும் மாற்றம் அடைந்த நீராவியானது காற்றில் மிதந்து கொண்டிருக்கும் தூசி படலத்தில் ஒட்டிக் கொண்டு மேகங்களாக உருமாறி விடுகிறது.

முகில்கள் கறுப்பு நிறமாக மாற காரணம் யாது ? 🤔🤔🤔🤔

மேகங்கள் என்பது காற்று மற்றும் நீர் திவளைகள் கலந்த கலவை. சாதாரண நேரங்களில் சூரியனால் இதனை ஊடுருவ முடியும். அதேவேளை மழைக் காலங்களில் அல்லது மழைக்கு முன்பு மேகங்களின் அடர்த்தி அதிகமாகிறது மேகத்தின் தடிப்பு அதிகமாகிறது. அந்த நிலையில் வெள்ளையாக இருக்கும் மேகம் சாம்பலாகவும் அதை விட அதிகமாகும் போது கறுப்பாகவும் தெரிகிறது.

இதன் ஊடே , சூரிய வெளிச்சம் ஊடுருவி செல்ல இயலாது. இதனாலேயே மழை காலங்களிலும், தாழமுக்க நேரங்களிலும் சூரிய வெளிச்சம் இன்மையால் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது.