கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சை ஜனவரி மாதம் 9ஆம் திகதி ஆரம்பமாக விருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.
11 பாடவிதானங்களுக்கான முன்னோடிப் பரீட்சைகள் இவ்வாறு இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் அடுத்த மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஐந்து கட்டங்களின் கீழ் 17 நகரங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் கடந்த 25 ஆம்திகதி ஆரம்பமானதுடன் எதிர்வரும் பெப்ரவரி இறுதி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.